அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் தொடங்கியுள்ள நேரடி இராணுவ மோதல்கள், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் நீட்டிக்கச் செய்யும் என்று சர்வதேச எரிசக்தி முகவரகம் எச்சரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமாக உலகளாவிய…

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் தொடங்கியுள்ள நேரடி இராணுவ மோதல்கள், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் நீட்டிக்கச் செய்யும் என்று சர்வதேச எரிசக்தி முகவரகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமாக உலகளாவிய மசகு எண்ணெய் சந்தை மெல்ல மீண்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் அந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைத் தன்வசம் கொண்டுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' பகுதி, இந்த வார மோதல்களால் மீண்டும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.வீழ்ச்சி

இந்த மூலோபாய நீர்வழியின் மூடல் காரணமாக, உலக சந்தைக்கு வர வேண்டிய ஒரு நாளைக்கு 14 மில்லியன் பெரல் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு உலகளாவிய மசகு எண்ணெய்க்கான தேவை மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் மாதாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தற்போது சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பெரல் 76.37 டொலராக நிலைபெற்றுள்ள போதிலும், வரும் வாரங்களில் விநியோகத் பற்றாக்குறை காரணமாக இதன் விலை மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.ஈரான் தாக்குதல் இதற்கிடையில், மோதலைத் தணித்து மீண்டும் தற்காலிகப் போர்நிறுத்தத்தைக் கொண்டுவரப் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் போன்ற அண்டை நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால், பிராந்திய அமைதியைக் காக்க எகிப்து மற்றும் வளைகுடா நாடுகள் (GCC) இருதரப்பையும் போரைக் கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றன.