ஈழத் தமிழ் பெண் ஒருவர் உடுவில் மற்றும் பல வதை முகாம்களில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகள் மற்றும் உயிர் தப்பிய துயரமான நிகழ்வுகளைப் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றப்பட்டு, கடுமையான உ…
ஈழத் தமிழ் பெண் ஒருவர் உடுவில் மற்றும் பல வதை முகாம்களில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகள் மற்றும் உயிர் தப்பிய துயரமான நிகழ்வுகளைப் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றப்பட்டு, கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, உடுவில் ராணுவ முகாமில் நடந்த அநீதிகளை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்கள்,குறிப்பாக இளைஞர்கள் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள், மற்றும் சித்திரவதைக் கூடங்களில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐசிஆர்சி (ICRC) அமைப்பில் அவர் பதிவு செய்திருந்ததாலும், ஒரு வெளிநாட்டு பெண் அதிகாரி அவருக்கு உதவியதாலும், அவர் உயிர்தப்ப முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலிலும், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க..

