எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு இந்த மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ள…

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு இந்த மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவிகள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (16) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மனுதாரர் தரப்பு மற்றும் சட்டமா அதிபர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.