டெங்கு நோய் தற்போது கடுமையாக பரவி வருவதால் அதிக அபாயமுள்ள பகுதிகளில் செயல்படும் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்த…
டெங்கு நோய் தற்போது கடுமையாக பரவி வருவதால் அதிக அபாயமுள்ள பகுதிகளில் செயல்படும் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல் எனவே கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, மேற்கு மாகாணம் உட்பட பல மாகாணங்களில் கிட்டத்தட்ட எழுபதாயிரம் பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்த பின்னர் பாடசாலைகளையோ, பல்கலைக்கழகங்களையோ மூடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், தற்போது பல மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்
நோயாளிகளுக்குப் போதுமான வசிப்பிட வசதிகள் இல்லாததால், பல நோயாளிகள் மருத்துவமனைகளின் படுக்கைகளுக்கு அடியிலோ அல்லது நடைபாதைகளிலோ இருக்கின்றனர் என்றும், இது நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மூடுவதற்கு கல்வி அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலம் கடந்த பிறகு மூடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

