உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இருந்து தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடக்கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கபட்டுள்ளன.குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத…

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இருந்து தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடக்கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கபட்டுள்ளன.குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், இந்த மனு இன்று (09) நான்காவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத், விடயங்கள் தொடர்பில் மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த மனு மீதான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.