வாகனப் பதிவு எண்களை இதுவரை பெற்றுக்கொள்ளாத வாகன உரிமையாளர்கள் அவற்றை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சம் வாகனப் பதிவு எண்கள் உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாமல் திணைக்க…
வாகனப் பதிவு எண்களை இதுவரை பெற்றுக்கொள்ளாத வாகன உரிமையாளர்கள் அவற்றை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சம் வாகனப் பதிவு எண்கள் உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாமல் திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதிகள் குறைவாக இருந்த காலப்பகுதியிலும், மாகாணங்களுக்கு இடையிலான வாகனப் பதிவு மாற்றங்களுக்காக அச்சிடப்பட்ட பதிவு எண்களே பெரும்பாலும் இவ்வாறு குவிந்துள்ளதாக திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்த பதிவு எண்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவை மட்டுமே உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை தங்களது பதிவு எண்களை பெற்றுக்கொள்ளாதவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பெறப்படாத பதிவு எண்கள் பின்னர் அகற்றப்பட்டு பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், புதிய நிறுவனம் வாகனப் பதிவு எண்களை அச்சிடும் பணியை தற்போது ஆரம்பித்துள்ளதால், பழைய கையிருப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

