மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் இன்று (08)உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்னிலையில் தனது கடமையினைப் பொறுப்பேற்றபுதிய செயலாளருக்குப் பொன்னாடை போ…
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் இன்று (08)உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்னிலையில் தனது கடமையினைப் பொறுப்பேற்றபுதிய செயலாளருக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவர் தனது புதிய பதவியில் திறம்படச் செயலாற்ற சபையின் தவிசாளர், உத்தியோகஸ்தர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இவர் திருகோணமலை மாநகர சபையில் பதில் கணக்காளராக கடமையாற்றி இருந்ததுடன்இவர் ஒரு சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

