வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் ஹெரோயின் கடத்தியவர் யாழில் கைது! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join வாசனை சவர்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப் பொருளை கடத்தி, யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக…
வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் ஹெரோயின் கடத்தியவர் யாழில் கைது!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
வாசனை சவர்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப் பொருளை கடத்தி, யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன கூறுகையில்,
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு வாசனை சவர்காரங்களுடன் கைதுசெய்யப்பட்டார்.
பொலிசாரின் சோதனையின் பொது வெளியிடமொன்றிலிருந்து வரவழைக்கப்பட்ட வாசனை சவர்காரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
கைதுசெய்தப்பட்ட நபர் ஏற்கனவே இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவராவார்.
மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ் பொலிஸ் பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர், என்று தெரிவித்தார்.

