பாணந்துறை, வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கனுவ வீதியில் உள்ள வாடகை வீட்டில் இளம் யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. கல்கனுவ வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த, நதுனி சஹஸ்ரீ கூரே என்ற 26 வயது திருமணமாகாத இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீ…

பாணந்துறை, வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கனுவ வீதியில் உள்ள வாடகை வீட்டில் இளம் யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கனுவ வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த, நதுனி சஹஸ்ரீ கூரே என்ற 26 வயது திருமணமாகாத இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பொலிஸார் விசாரணை குறித்த யுவதி தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வந்த நிலையில், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், இந்த வீட்டிலிருந்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும், கூடுதலாக ஒரு வழக்கறிஞராக சட்டப்பணிகளையும் செய்து வந்துள்ளார்.

இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து பாணந்துறை, வடக்கு பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றது.