காலி - கொஸ்கொட, கணேகொடெல்ல பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை ( 20) இவர்கள் கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.வாடகை வீடொன்றில் சிக்கிய இளைஞர்கள் இதன்போது சந்தேகநபர்களிட…
காலி - கொஸ்கொட, கணேகொடெல்ல பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை ( 20) இவர்கள் கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.வாடகை வீடொன்றில் சிக்கிய இளைஞர்கள் இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, டி.56 ரக துப்பாக்கியொன்றும், 8 தோட்டாக்கள், ஒரு 12 போர் ரக தோட்டா, ஒரு கையெறி குண்டு, 20 கிராம் ஐஸ் போதைப்பொருள், 320 மில்லிகிராம் போதைப்பொருள், போதைப்பொருளை அளவிடும் மின்னணு தராசு மற்றும் ரூ. 8,19,000 பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.இதேவேளை, துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் சகோதரர்கள் என்றும், அவர்கள் கொஸ்கொட, நேப்பே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களாக கணேகொடெல்ல பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மற்றொரு சந்தேகநபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருளும் பணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

