மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தங்க நகைக்கடையொன்றில் மிகவும் நுணுக்கமான முறையில் காப்பு ஒன்றை திருடிய பெண் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம்(10.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்க காப்புடன் கைது சம்பவம் தொடர்பில் மேல…
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தங்க நகைக்கடையொன்றில் மிகவும் நுணுக்கமான முறையில் காப்பு ஒன்றை திருடிய பெண் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம்(10.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்க காப்புடன் கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில் கடந்த 2026.06.04 அன்று தங்க நகை கொள்வனவு செய்வதற்காக குறித்த பெண் கடைக்கு வந்துள்ளார்.
இதன்போது, ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்க காப்பு ஒன்றை நுணுக்கமான முறையில் திருடிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடையின் உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நேற்று10) களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் முன்னாள் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி
இதன்போது அவரிடம் இருந்த தங்க காப்பு மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரையும் தங்க நகையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 45 வயதுடை அம்பாறை பிரதேசத்தை பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வெளியிடங்களில் இருந்து வருகை தருபவர்களிடம் சற்று அவதானமாக இருக்குமாறு அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.

