நாட்டில் வாய் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் மூவர் உயிரிழப்பதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், புகையிலை, சிகரெட், மதுபானம் மற்றும் புகை…

நாட்டில் வாய் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் மூவர் உயிரிழப்பதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், புகையிலை, சிகரெட், மதுபானம் மற்றும் புகையிலை கலந்த வெற்றிலைப் பாக்கு பயன்படுத்துவது வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட சில தொழில்களில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும், பொதுமக்கள் தீய பழக்கவழக்கங்களைத் தவிர்த்து, வாயில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.