வாழைச்சேனை-சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
வாழைச்சேனை-சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
சுங்காங்கேணி பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா மகேந்திரகுமார் (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் நேற்று திங்கட்கிழமை மாலை சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்கள் அகப்படுவதற்காக வலையை கட்டி வைத்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து இன்று காலை குளத்தில் கட்டி வைத்துவிட்டு வந்த வலையை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
எனினும் அவர் நண்பகல் ஆகியும் வீடு திரும்பாததால் அவருடைய மனைவியும் பிள்ளையும் அவரை தேடி குளத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர் குளத்தில் மிதந்து கொண்டிருப்பதை அவதானித்த அவர்கள் சத்தமிட்டு அயலவர்களை அழைத்து குளத்திலிருந்து குறித்த குடும்பஸ்தரை மீட்ட போது அவர் உயிரிழந்திருந்தமை தெரிய வந்துள்ளது.

