நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, காலி மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்ற அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது கு…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, காலி மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்ற அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் தலைவரும் விசேட மருத்துவ நிபுணருமான மருத்துவர் சமல் சஞ்சீவ, இந்த வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவது சமூகத்துக்கும் சூழலுக்கும் ஏற்புடையதல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.மஹமோதர வைத்தியசாலைஅவர் மேலும் தெரிவிக்கையில், மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவதற்குப் பதிலாக, அதனைச் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்தியேக வைத்தியசாலையாகவோ அல்லது டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கான விசேட சிகிச்சை மையமாகவோ மாற்றுவதே தற்போதைய சூழலுக்குப் பொருத்தமானது.தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், தென் மாகாணத்திலுள்ள போதனா வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.இத்தகைய நெருக்கடியான நிலையில், ஒரு வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவது எதிர்காலத் தேவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்த வைத்தியசாலை பிரதான வீதிக்கு அருகிலும், கடற்கரைக்கு மிக அண்மையிலும் அமைந்துள்ளமையால், இதனைச் சிறைச்சாலையாக மாற்றாமல், கல்விப் பயிற்சி மையமாகவோ அல்லது சுற்றுலாத்துறை சார்ந்த வைத்தியசாலையாகவோ மாற்றுவது சுற்றுச்சூழலுக்கும் சமூகத்துக்கும் அதிக நன்மைகளைத் தரும் என குறிப்பிட்டுள்ளார்.

