அமெரிக்காவின் 85 ராணுவ முகாம்களை ஈரான் தாக்கியதால் வளைகுடா பகுதியில் பெரும் போர் பதற்றம் உருவாகியுள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள ஹேர்முஸ் நீரிணையில் சென்ற வணிக எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரோன் தாக்குதல்கள் நடந்தன. இதற்கு பதிலடியாக, ஈரானில் உள்ள ஈரானின் இஸ்…

அமெரிக்காவின் 85 ராணுவ முகாம்களை ஈரான் தாக்கியதால் வளைகுடா பகுதியில் பெரும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

வளைகுடா பகுதியில் உள்ள ஹேர்முஸ் நீரிணையில் சென்ற வணிக எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரோன் தாக்குதல்கள் நடந்தன.

இதற்கு பதிலடியாக, ஈரானில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் படகுகள், கடலோர ரேடார் தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட 85 இலக்குகள் மீது அமெரிக்காவின் சென்ட்காம் எனப்படும் மத்திய கட்டளைப்பிரிவு துல்லியமான ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தியது.

இந்தநிலையில்,ஈரானுக்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை என்றும், ஹோர்முஸ் நீரிணை மற்றும் செங்கடலைக் கட்டுப்படுத்துவதே அவர்களுக்குப் பெரிய பலம் என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு ஒக்டோபர் தேர்தலை எதிர்கொள்ள லெபனான் விவகாரத்தைப் பயன்படுத்துவது குறித்தும், ஈரான் இதனை ஒரு 'சிவப்பு கோடாக' கருதுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

ஈரான் செங்கடலை நேரடியாகக் கட்டுப்படுத்துவதாகக் கூறவில்லை; மாறாக, செங்கடல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் செல்வாக்கும், ஹூதீஸ் போன்ற அமைப்புகள் மூலம் கடல்வழிப் போக்குவரத்தைப் பாதிக்கும் ஈரானின் திறனுமே ஒரு முக்கிய சக்தியாகப் பார்க்கப்படுகிறது.    ஈரானுக்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை என்றும், இந்த முக்கியமான கடல்வழிப் பாதைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ஈரானுக்கு அணு ஆயுதத்தை விட வலிமையான சக்தியை அளிப்பதாக ரஷ்ய அதிகாரி ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..