நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அந்த தொகைகளை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் உயர்நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரி நிலுவைகளை வசூலிக்க உத்தரவிடக் கோரி தாக்…

நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அந்த தொகைகளை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் உயர்நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி நிலுவைகளை வசூலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.