மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தீயணைப்பு கருவி (Fire Extinguisher) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (07) மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாநகர…

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தீயணைப்பு கருவி (Fire Extinguisher) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (07) மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் மாநகரசபை ஆணையாளர் என். தனஞ்ஜெயன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

அண்மைக்காலங்களில் மட்டக்களப்பு நகரப் பகுதிகளில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் தீ விபத்துகள் அதிகரித்து வருவதாக தெரிவித்த மாநகர முதல்வர், நேற்று இடம்பெற்ற இரண்டு கடை தீ விபத்துகளும் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

தீ விபத்து ஏற்படும் போது ஆரம்ப கட்டத்திலேயே அதனை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வர்த்தக நிலையத்திலும் தீயணைப்பு கருவி பொருத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத வர்த்தக நிலையங்களுக்கு எதிர்வரும் ஆண்டுகளில் வியாபார அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது எனவும் அவர் எச்சரித்தார்.

மேலும், பொதுமக்கள் கூடும் வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் போன்ற இடங்களில் தீ பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என மாநகரசபை வலியுறுத்தியுள்ளது.