வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கு இல் நடைபெறவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர்…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கு இல் நடைபெறவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் துல்லியமான தரவுகள் இல்லாததால் வேலைவாய்ப்பு வழங்குவதில் சிக்கல்கள் நிலவுவதாகக் குறிப்பிட்டார். எனவே அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் தங்களது கல்வி விபரங்களுடன் நேரில் வந்து பதிவு செய்யுமாறும், வேலைவாய்ப்பு மற்றும் பட்டதாரிகள் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெறும் திறந்த கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரும் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.