வத்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை…
வத்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சோதனையின்போது, சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 140 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 538 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

