பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக கருதப்படும் வத்தளை பிரதேசங்களில் அமைந்துள்ள 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை முடக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின…
பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக கருதப்படும் வத்தளை பிரதேசங்களில் அமைந்துள்ள 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை முடக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கவனத்திற்கொண்டு போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.பெண் தொடர்பில் கிடைத்த முறைப்பாடு வத்தளை,உஸ்வதகேயாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அங்கு நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் இரண்டு மாடி கொண்ட சொகுசு வீட்டை நிர்மாணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக வத்தளை, நுகாபே பகுதியில் அமைந்துள்ள 9.5 பேர்ச்சஸ் காணியில் அவர் நிர்மாணித்த சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான வீடும், கடையும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் நிர்மாணிக்கப்பட்டவை என்பது விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சந்தேகநபர் தப்பியோட்டம் இதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி, சம்பந்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் அறிக்கையிட விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, அங்கு முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான் நேற்று (08) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த சொத்துக்களை 07 நாட்களுக்கு முடக்குமாறு (தடைசெய்ய) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த மோசடி சொத்துக்களின் உரிமையாளரான சந்தேகநபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

