வவுனியாவில் இ.போ.சபை பேருந்துக்கள் இன்று(13) காலை முதல் பேருந்துச் சேவைகளை முன்னெடுக்காமையால் அரச ஊழியர்கள், மாணவர்கள், பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சாலையின் பொறியியல் பகுதியில் பணிபுரியும் ஊழியர்கள் கடமைக்கு சமூகம் தராமையே பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியா…

வவுனியாவில் இ.போ.சபை பேருந்துக்கள் இன்று(13) காலை முதல் பேருந்துச் சேவைகளை முன்னெடுக்காமையால் அரச ஊழியர்கள், மாணவர்கள், பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை சாலையின் பொறியியல் பகுதியில் பணிபுரியும் ஊழியர்கள் கடமைக்கு சமூகம் தராமையே பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.சேவைகள் ஸ்தம்பிதம்

மேலதிக நேரக்கொடுப்பனவு விடயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பொறியில் பிரிவு ஊழியர்கள் சமூகம் தரவில்லை எனக் கூறப்படுகின்றது.

இன்றையதினம் (13.07) திங்கட்கிழமை என்பதால் பேருந்து சேவைகள் இன்மையால் பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக பருவகால சீட்டு பெற்றிருந்தவர்கள் அசௌகரியங்களை அதிகமாக எதிர் நோக்கி இருந்ததுடன், சில அரச ஊழியர்கள் தாமதமாகவே தமது வேலைத் தளங்களுக்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.