வவுனியா- ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது.விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து ஈரப்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஏ9 வீதியில்…
வவுனியா- ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது.விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து ஈரப்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஏ9 வீதியில் அமைந்துள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகாமையில் தரித்து நின்ற கனரக வாகனத்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.மேலதிக விசாரணை குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சாஜன்டான கொஸ்வத்தேகெதர விஜகுலகொட சூரியதாச (வயது 46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

