வெளிநாட்டவர் ஒருவருக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகிண்ணியா – மாஞ்சோலை பகுதியில் இருந்து நிலாவெளி பகுதிக்கு குறித்த வலம்புர…

வெளிநாட்டவர் ஒருவருக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகிண்ணியா – மாஞ்சோலை பகுதியில் இருந்து நிலாவெளி பகுதிக்கு குறித்த வலம்புரிச் சங்குகளை எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோதே, நேற்று (07) நண்பகல் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபரிடம் இருந்த இரண்டு வலம்புரிச் சங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் இரண்டாம் கட்டளை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நுவன் திலகரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், பொலிஸ் கான்ஸ்டபிள்களான சில்வா, சதுரங்க மற்றும் தினேஷ் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வலம்புரிச் சங்குகளும் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.