கம்பளையில் பாடசாலை மாணவி ஒருவர், உறவினரால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. 12 வயது பாடசாலை மாணவி ஒருவரை வைத்தியர்கள் பரிசோதித்த போது, சிறுமியின் தாத்தாவினால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி…

கம்பளையில் பாடசாலை மாணவி ஒருவர், உறவினரால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.

12 வயது பாடசாலை மாணவி ஒருவரை வைத்தியர்கள் பரிசோதித்த போது, சிறுமியின் தாத்தாவினால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநீர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்கு சென்ற போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

தாத்தா கைது54 வயதான சந்தேக நபர் 5 பிள்ளைகளின் தந்தையாகும். பாதிக்கப்பட்ட சிறுமி, சந்தேக நபரின் வீட்டின் அருகில் வசிக்கும் அவரது மகன் ஒருவரின் மகள் என தெரியவந்துள்ளது. வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பளை பொலிஸார், சந்தேக நபரான சிறுமியின் தாத்தாவை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 24 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுமி வாக்குமூலம்சிறுமியின் தாய் நான்கு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்காக சந்தேக நபரினால் தகாத செயற்பாட்டுக்கு சிறுமியை உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் சிறுமிக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி தகாத செயற்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலும் விசாரணை மேற்கொண்டதில், தனது தாத்தா நீண்ட காலமாக தன்னைத் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிறுமி நேற்று பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.