வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்புவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணை விசேட குற்றவிசாரணைப் பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக…

வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்புவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணை

விசேட குற்றவிசாரணைப் பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து சுமார் 60 இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் மற்றும் மற்றைய நபர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட குற்றவிசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.