நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள், மற்ற சிறைகளில் கடுமையான உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஆணைக்குழு (சிபிஆர்பி) குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பில் குறித்த ஆணைக்குழு நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீர்கொழும்ப…

நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள், மற்ற சிறைகளில் கடுமையான உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஆணைக்குழு (சிபிஆர்பி) குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பில் குறித்த ஆணைக்குழு நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகள், அவர்கள் மாற்றப்பட்டுள்ள சிறைகளுக்குள் கடுமையான உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற தகவல்கள் தொடர்ந்து கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவிற்கு (CPRP) கிடைத்து வருகின்றன.முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை.. குறிப்பாக, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சில கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டு, அவர்களில் சிலரின் கால்கள் முறிக்கப்பட்டுள்ளதுடன், மனிதாபிமானமற்ற இந்த தாக்குதலின் காரணமாக அவர்களின் முதுகுப் பகுதிகளில் ஆழமான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.மேலும், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இன்று இரவு நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது மேலும் கடுமையான சித்திரவதைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தாக்குதல்கள் உண்மையில் நடைபெற்று வந்தால், அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசரமாக தலையிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், தாக்குதலால் காயமடைந்துள்ள கைதிகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அதேவேளை, நீர்கொழும்பு சிறையிலிருந்து மாற்றப்பட்ட அனைத்து கைதிகளின் உயிர் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.