இரத்தினபுரி பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தனக்கு சொந்தமான வீட்டிலேயே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இளம் பெண்ணின் சடலம் மீட்பு இரத்தினபுரி , கொடிகமுவவில்…
இரத்தினபுரி பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனக்கு சொந்தமான வீட்டிலேயே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இளம் பெண்ணின் சடலம் மீட்பு
இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச சந்தமாலி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த வீட்டின் பிரதான நுழைவாயில் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், 7ஆம் திகதி முதல் கதவு திறந்திருந்ததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் படுக்கை அறையில் இறந்துகிடந்துள்ளதுடன், அவரது ஆடைகள் களைந்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

