மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று(10.07.2026) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், வீடு ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் பேருந்து சாரதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். ​கதிர்காமத்திற்குப் பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேர…

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று(10.07.2026) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், வீடு ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் பேருந்து சாரதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

​கதிர்காமத்திற்குப் பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றே, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட கடுமையான தூக்கம்​விபத்து இடம்பெற்ற வேளையில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் எவரும் இருந்திருக்கவில்லை என்றும் இதன் காரணமாக பெரும் உயிர்ச்சேதங்கள் மற்றும் ஆபத்துகள் எற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், பேருந்து மோதிய வேகத்தில் வீட்டின் முன்பகுதி உள்ளிட்ட கட்டடப் பகுதிகள் கடுமையாக இடிந்து சேதமடைந்துள்ளன.

​விபத்தில் படுகாயமடைந்த பேருந்து சாரதி உடனடியாக அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு, மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

​நீண்ட தூரப் பயணத்தைத் தொடர்ந்து சாரதிக்கு ஏற்பட்ட கடுமையான தூக்கக் கலக்கமே (அயர்வு) இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

​இச்சம்பவம் குறித்து மூதூர் போக்குவரத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான உண்மைப் பின்னணி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.