Colombo (News 1st) விமான ஓடுதளங்கள் மற்றும் விமான நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு விமானப்படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.பட்டம் விடுவதால் விமானங்களின் பயணங்களுக்கு நேரடி இடையூறாக அமையும் என இலங்கை விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட…
Colombo (News 1st) விமான ஓடுதளங்கள் மற்றும் விமான நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு விமானப்படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.பட்டம் விடுவதால் விமானங்களின் பயணங்களுக்கு நேரடி இடையூறாக அமையும் என இலங்கை விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க, இரத்மலானை, ஹங்குரன்கொட, திருகோணமலை - சீனன்குடா, அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தளை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விமான ஓடுதளங்களை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடும் செயற்பாடானது தற்போதைய நிலையில் கடும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது.விமானத்தின் எஞ்சினுக்குள் அல்லது அதன் செயற்பாட்டு தொகுதிக்குள் பட்டத்தின் நூல்களோ அல்லது பட்டத்தின் பாகங்களோ உராய்வதன் மூலம் முழு விமானமும் கடுமையான விபத்திற்குள்ளாகும் நேரடி அபாயம் காணப்படுவதாக விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.இதனால் பெருமளவிலான உயிர் சேதம் மற்றும் சொத்து சேதங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகக் காணப்படுவதால், விமானப் பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பயணிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும் ஒத்துழைப்பு வழங்குமாறு விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

-557394_850x460.jpg)