யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம்(09.07.2026) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின…

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம்(09.07.2026) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.31ஆம் ஆண்டு நினைவேந்தல்

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி இராணுவத்தினர் விமானத் தாக்குதல்களின் உதவியுடன்  முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்துள்ளனர். அன்றைய தினம் திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசியுள்ளன. இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்ததுடன் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.