கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகருக்குப் புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானத்தில், நடுவானில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பிய நாட்ட…

கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகருக்குப் புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானத்தில், நடுவானில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், காற்றின் கடுமையான அழுத்தத்தால் ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.இன்ஜினிலிருந்து உடைந்த பாகங்கள் அதிர்ஷ்டவசமாக அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், அவரது தலை மற்றும் தோள்பட்டை வரை மட்டுமே ஜன்னலுக்கு வெளியே தொங்கியுள்ளது.

விமானத்திற்குள் இருந்த மற்ற பயணிகள் உடனடியாகச் செயல்பட்டு, சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு அவரை பத்திரமாக உள்ளே இழுத்து மீட்டுள்ளனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பலத்த சத்தத்துடன் ஜன்னல் உடைந்ததாகவும், உடனடியாக விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் குறைந்து ஒக்சிஜன் முகமூடிகள் மேலே இருந்து கீழே விழுந்ததாகவும் பயணிகள் விவரித்துள்ளனர்.

இன்ஜினில் இருந்து உடைந்த சில பாகங்கள் ஜன்னலில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பயணிகள் கருதினாலும், விமான நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.பத்திரமாகத் தரையிறங்கிய விமானம் இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானம் உடனடியாகத் தெசலோனிகி விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிக்குத் தரையிறங்கியவுடன் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்த 18 ஆண்டுகள் பழமையான விமானத்தை ரையான்ஏர் நிறுவனத்தின் துணை நிறுவனமான மல்டா ஏர் இயக்கியுள்ளது.

இந்த அபாயகரமான விபத்து குறித்து கிரீஸ் மற்றும் மல்டா நாட்டின் சிவில் விமான போக்குவரத்துத் துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.