பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. குறித்த திட்டத்தின் கீழ் 370 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.இதன் முதற்கட்டமாக, நேற்று (11) அலரி மாளிகை…
பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் 370 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.இதன் முதற்கட்டமாக, நேற்று (11) அலரி மாளிகையில் நடைபெற்ற 'சரஸ்வி திரியோ அபிமான் 2026' நிகழ்வில், 236 மாணவர்களுக்கு இதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட தேவையுடையோர் என வகைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படுகின்றது.
விசேட தேவையுடைய மாணவர்கள் தங்களின் உயர்கல்வியைத் தடையின்றித் தொடர ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

