கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.உணவு ஒவ்வாமைகந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன…

கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.உணவு ஒவ்வாமைகந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார்.

அதன்பின்னர் அந்த உணவை உண்கொண்ட அனைவரும் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 ஆண் பிள்ளைகளும், 2 பெண் பிள்ளைகளும் அடங்குகின்றனர். இதில் 5 மாணவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, குறித்த மாணவன் வழக்கமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்பது வழமையாக இருந்துள்ளது.கந்தளாய் பொலிஸார் விசாரணைஇன்றும் சூரியகாந்தி விதைகள் என நினைத்து, வீட்டில் இருந்த ஆமணக்கு (Castor) விதைகளையும் அவற்றுடன் சேர்த்து கொண்டு வந்து பகிர்ந்து உண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே மாணவர்களுக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.