இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவை சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் கொலை சம்பவ சந்தேக நபரான பெண்ணின் காதலன் தொடர்பில் திடுகிடும் தகவ்ல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி லோகட் கோட்டையில் உள்ள பள்ளத்தாக்கிலிருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அ…

இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவை சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் கொலை சம்பவ சந்தேக நபரான பெண்ணின் காதலன் தொடர்பில் திடுகிடும் தகவ்ல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 18ம் தேதி லோகட் கோட்டையில் உள்ள பள்ளத்தாக்கிலிருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேத்தன் அகர்வாலுக்கும், சியா கோயல் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த போது கேத்தன் அகர்வாலை சியா கோயல் அந்த கோட்டைக்கு கூட்டி சென்று சியா கோயல் மற்றும் அவரின் காதலர் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும் கீழே தள்ளி கொலை செய்திருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.சேத்தன் சவுத்ரிக்கு பல பெண்களுடன் தொடர்பு சேத்தன் சவுத்ரியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட சியா கோயில் கேத்தனை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஏற்கனவே திருமண செலவு என சொல்லி கேத்தன் அகர்வாலிடம் ஒரு கோடியை சியா கோயல் வாங்கி தனது காதலர் சேத்தன் சவுத்ரிக்கு கொடுத்த செய்தி வெளியானது. இந்நிலையில், சேத்தன் சவுத்ரிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.கோயலிடமிருந்து வாங்கிய பணத்தில் வேறொரு பெண்ணுக்கு இரண்டு லட்சம் மதிப்பிலான மோதிரத்தை சேத்தன் சவுத்ரி வாங்கி கொடுத்ததும் தெரியவந்திருக்கிறது.

காதலனை நம்பி வருங்கால கணவனை திட்டமிட்டு கொலை செய்த பெண்ணிற்கு இது சரியான தண்டனைதான் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.