விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புதிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வீடமைப்பு, நிர்மாணத்துறை…

விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புதிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் இதனைத் தெரிவித்தார்.

இந்த வங்கியின் ஊடாக ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ஒரு இலட்சம் ரூபா உற்பத்திச் செலவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், சீனாவுடன் கலந்துரையாடி ஒவ்வொரு விவசாயத் திட்டத்திற்கும் 'விவசாய உபகரண மத்திய நிலையம்' ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.