வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 8 தமிழர்கள் அடங்குவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 8 தமிழர்கள் இதில…
வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 8 தமிழர்கள் அடங்குவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 8 தமிழர்கள்
இதில் பழனியைச் சேர்ந்த முருக பிரபு, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.
சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா நிறுவனம் சிலரை சுற்றுலா அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. 36 பேர் பயணித்த அந்தப் படகு, மே ருட் ஙோஆய் (May Rut Ngoai) தீவின் கரையிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் திடீரென கவிழ்ந்தது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சுற்றுலாப் படகுகள் மற்றும் கடலோர காவல்படை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. இதில் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனனர்.
உயிரிழந்த அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.32 இந்தியர்கள்இந்திய தூதரகம் வெளியிட்ட தகவலில், இந்த சம்பவம் தொடர்பாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம், படகில் பயணித்த 32 இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
"பு குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது மிகவும் துயரமான சம்பவமாகும்" என்று இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தகவல் மற்றும் உதவி வழங்குவதற்காக ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும், ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் (Control Rooms) அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த இரங்கல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.Extremely saddened to learn about the tragic news of a boat accident involving Indian nationals near Phu Quoc, Vietnam. My sincere condolences to the families who lost their loved ones. My prayers for the early recovery of the injured survivors.Our Embassy and Consulate are…— Narendra Modi (@narendramodi) July 11, 2026 அவர் வெளியிட்ட பதிவில், இந்த சுற்றுலாவில் பங்கேற்றவர்கள் லாவா மொபைல் (Lava Mobile) நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்ததாகவும், சம்பவ இடத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த Lava Mobile நிறுவன ஊழியர்கள் மற்றும் விநியோகஸ்தர்களே படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

