யாழ்.ஆழியவளை பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து கஞ்சா மீட்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம்…

யாழ்.ஆழியவளை பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து கஞ்சா மீட்பு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14.5 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

ஆழியவழைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகள் காணப்பட்டதை தொடர்ந்து மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சா பொதிகளை கைப்பற்றி மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.