இன்று (9) யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சமூகம் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளதுடன், குறித்த ஆர்ப்பாடமானது பக்லைக்கு அவதூறு பரப்பும் செயல் எனவும் , யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில்…

இன்று (9) யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சமூகம் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளதுடன், குறித்த ஆர்ப்பாடமானது பக்லைக்கு அவதூறு பரப்பும் செயல் எனவும் , யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மாணவர் ஒன்றியத்தினால் விசேட ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த ஊடக அறிக்கையில், ஆர்ப்பாட்டத்திற்கும்  மாணவர் ஒன்றியங்களுக்கும் தொடர்பு இல்லை

இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும், கல்விமான்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்கள் குறித்து தமது கன்டணங்களை மாணவர் ஒன்றியம் பதிவு செய்துள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான பொய்ப்பிரசாரங்கள் மற்றும் திட்டமிட்ட நலன்கருதும் முன்னெடுப்புகளை கண்டித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இதேவேளை, திட்டமிட்ட அவதூறுகள் தொடர்பிலும் மாணவர் ஒன்றியம் தொடர் அவதானிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புணர்வுக்கும் எதிரான செயல்களால், தேசியத்தினை பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் சமூகம் ஆழமாக அவதானித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டரீதியாக குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து, சமூக ஊடகப் பரப்புரையாக அவமதிப்பு உருவாக்கும் முயற்சிகளை கட்டவிழ்த்து, சமூக ஊடக பதிவுகளில் நீதியற்ற ஊடக தரக்குறைவான நிலையும் அவதானிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறன செயற்பாடுகள் தமிழ்ச் சமூகத்தின் பொறுப்புணர்வுக்கும், நிதானமான ஊடகப் பொறுப்புணர்வுக்கும் கேள்விக்குறியாக இருப்பதுடன், சமூக ஊடகங்களில் நிதானம் தவறிக் கருத்து வெளியிடுபவர்களின் பின்னால் செல்லும் பரிதாபநிலையை சமூகம் மிக ஆழமாக அறிந்து கொள்வதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

வெறுப்பை மட்டுமே உணவாகக் கொண்டு குந்தகம் முற்றும் இந்தத் தாக்குதல்களை பல்கலைக்கழக மாணவர் சமூகம் அடையாளம் கண்டுகொண்டு, அவற்றைச் செய்வோரை சமூகத்தின் முன் கொண்டு செல்வதற்கான முயற்சிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியான ஆதரவைத் தெரிவிப்பதாகவும், ஒன்றியும் கூறியுள்ளது.

அதேவேளை, சமூக ஊடகவியலாளர் அமைப்புகள், செய்தியாளர்களுக்கு எதிராக, சட்டத்திற்கும் நீதியுமானதுமான முன்னெடுப்புகளால் தம்மீதான அவதூறுகளை களைய முற்படும் ஆளுமைகளுக்கு மாணவர் சமூகத்தின் ஆதரவு எப்போதும் இருப்பதையும் வலியுறுத்த விரும்புவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.