யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்று 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் 02 மனித எச்சங்களின் குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும் இன்றையதினம் மனித எலும்புக்கூடுகள் எவையும் அகழந்து எடுக்கப்பட…

யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்று 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் 02 மனித எச்சங்களின் குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும் இன்றையதினம் மனித எலும்புக்கூடுகள் எவையும் அகழந்து எடுக்கப்படவில்லை என சட்டத்தரணி நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு , செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற போது , முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 என்பு கூடுகள் உட்பட 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 09ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் இடம்பெற்ற அகழ்வு பணிகளில் 21 என்பு கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

முதலாம் , இரண்டாம் கட்டங்கள் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.