யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…
யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே குறித்த அமைப்பின் ஸ்தாபகரான டேஷ் பாலசுப்ரமணியம் இதனைக் குறிப்பிட்டார்.மேலும் தெரிவித்த அவர், யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை வரையிலான ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை அவுஸ்ரேலிய பிரஜைகள் உட்பட்ட நூல் அமைப்பின் தோழர்களோடு நாம் நிறைவு செய்துள்ளோம்.செயற்றிட்டங்கள்குறித்த பயணம் தமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த உதவுவதாகவும் குறிப்பிட்ட அதேவேளை குறித்த பயணத்திற்கான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் வெளிநாட்டு வாழ் மக்களின் நிதி அன்பளிப்புகள் கிடைக்கப்பெறுவதாகவும் குறித்த உதவி மூலம் இங்குள்ள செயற்றிட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூலை மாதமும் நடாத்தப்படும் எனவும் தெரிவித்த டேஷ் பாலசுப்பிரமணியம் இதன்மூலம் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டு கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்தும் நீண்டகால இலக்கினைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

