யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இந்த வருடத்தின் இன்று வரையிலான காலப்பகுதியில், டெங்கு நோயுடன் 694 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் எந்தவித இறப்பும் இந்த வருடம் பதிவு செய்யப்படவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இந்த வருடத்தின் இன்று வரையிலான காலப்பகுதியில், டெங்கு நோயுடன் 694 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் எந்தவித இறப்பும் இந்த வருடம் பதிவு செய்யப்படவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.டெங்கு நோயின் பரம்பல்அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடமும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எந்த ஒரு இறப்புமே பதிவு செய்யப்படவில்லை. கடந்த வருடமும் இந்த வருடம் ஜூன் மாதம் இறுதிப்பகுதி வரை டெங்கு நோய் யாழ்ப்பாணம் மாவட்டத்திலே ஒரு பூரணமான கட்டுப்பாட்டிலே இருந்து வந்தது.
ஆனால் தற்போது நாட்டின் தென்பகுதியிலே, ஏனைய பல மாகாணங்களிலே டெங்கு நோயின் பரம்பல் மிகத் தீவிரமாகக் காணப்படுகின்றது. இந்த பின்னணியிலே, ஜூலை மாதத்தின் முதல் 7 நாட்களிலே, 65 நோயாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலே டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டிருக்கின்றார்கள். இது ஒரு சடுதியான அதிகரிப்பாகும்.
மேல் மாகாணத்திலே குறிப்பாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலே அதிகமான டெங்கு நோயாளர்கள் தற்போது இனங்காணப்பட்டிருக்கின்றார்கள்.பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் தென்பகுதியிலே, குறிப்பாக மேல் மாகாணத்தில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களிலே, உயர்கல்வி நிறுவனங்களிலே கல்வி கற்கின்றார்கள்.
அதேபோன்று பலர் தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்பிலே தங்கியிருந்து தொழில் செய்து வருகின்றார்கள்.
அவர்கள் விடுமுறைக்கு இங்கே வருகின்ற போது, பலர் இங்கே டெங்கு நோயுடன் வந்து எங்களுடைய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

