புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பாவனைக்காக இன்று(12.07.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளதுடன், வீதியை திறந்து வைத்துள்ளனர்.கிராமிய பாதைகளுக்கா…

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பாவனைக்காக இன்று(12.07.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளதுடன், வீதியை திறந்து வைத்துள்ளனர்.கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த 1.5 கிலோமீற்றர் நீளமான பாதை 74.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.