யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (09.07.2026) இடம்பெற்றுள்ளது.பொலிஸாரின் சோதனையின் போது இது…

யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (09.07.2026) இடம்பெற்றுள்ளது.பொலிஸாரின் சோதனையின் போது இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன கூறுகையில், யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு வாசனை சவற்காரங்களுடன் கைதுசெய்யப்பட்டார்.

பொலிஸாரின் சோதனையின் போது வெளியிடமொன்றிலிருந்து பொதி சேவை மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவற்காரத்தில் மாறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2023இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த மாதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவராவார்.

கைதான நபரிடம் மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ் பொலிஸ் பிரிவில் இந்த வாரம் 23 பேர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.