யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது.இதன்போது கடற்கரை வீதி, பாசையூரை சேர்ந்த 25 வயதுடைய பே.கனிடஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மரண விசாரணை இது குறித்த…
யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது.இதன்போது கடற்கரை வீதி, பாசையூரை சேர்ந்த 25 வயதுடைய பே.கனிடஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மரண விசாரணை இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றுமுன்தினம்(16.7.2026) 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மதுவருந்தியுள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் சென்ற நிலையில் அவர் அந்த மாடியிலேயே உறங்கியுள்ளார்.
பின்னர் அந்த மாடி கட்டிட வேலைகளை செய்வதற்காக வந்த வேலைக்காரர்கள் குறித்த குடும்பஸ்தர் அசைவற்று காணப்படுவதை அவதானித்தனர்.அதன்பின்னர் பொலிஸார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

