இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ (Jaffna Kings) அணியின் உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போட்டிகளை நிர்ணயிக்கும் (Match-fixing) குற்றச்சாட்…

இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ (Jaffna Kings) அணியின் உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போட்டிகளை நிர்ணயிக்கும் (Match-fixing) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு தொடர்பான ஊழல்கள் குறித்த தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில்:

“விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் (Prevention of Offences Relating to Sports Act) கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்சமயம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தனர்.