யூடியூப் காணொளிகளுக்கு 'லைக்' செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகள், நிதி மோசடிக்காகப் பின்னப்பட்ட வலையாகும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், டெலிகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பதுங்கியிரு…

யூடியூப் காணொளிகளுக்கு 'லைக்' செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகள், நிதி மோசடிக்காகப் பின்னப்பட்ட வலையாகும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், டெலிகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பதுங்கியிருக்கும் இத்தகைய மோசடிக்காரர்களிடம் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஒரு பொறி எந்தவொரு முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பும், மக்கள் தமது பொது அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துச் செயற்படுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக, ஒரு யூடியூப் காணொளிக்கு 'லைக்' இடுவதற்கு 500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஒரு பொறி என்பதைப் புரிந்துகொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.