ஒரு இராணுவ உயர் அதிகாரிக்காக பொதுமக்களுடைய 100 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திரானந்த டீ சில்வா தெரிவித்துள்ளார். நேற்று(17.07.2026) இடம்பெற்ற சம உரிமை இயக்கத்தின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட…

ஒரு இராணுவ உயர் அதிகாரிக்காக பொதுமக்களுடைய 100 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திரானந்த டீ சில்வா தெரிவித்துள்ளார். நேற்று(17.07.2026) இடம்பெற்ற சம உரிமை இயக்கத்தின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.காணி விடுவிப்பு குறிப்பாக முல்லைதீவு மாவட்டம் - கேப்பாப்புலவு, யாழ்ப்பாணம் மாவட்டம் - பலாலி, வயாவிளான், மயிலிட்டி பகுதிகளில் உள்ள காணிகள் இதுவரையில் உரிய மக்களிடம் கையளிக்கப்படவில்லை.இந்த விடயம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் எதிர்கட்சிகளாக இருந்த போது,  சுட்டிக்காட்டியவர்கள் இன்று அரசாங்கமாக மாறிய பொழுது கூறிய விடயங்களை அவர்கள் நிறைவேற்றவில்லை.இவர்களின் இடதுசாரி கொள்கை என்பது பொய்யான கொள்கையாகவே உள்ளது. இவர்களின் இடதுசாரி கொள்கையை வைத்துக்கொண்டு பொய்யாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு இராணுவ உயர் அதிகாரிக்காக 100 ஏக்கர் பொதுமக்களுடைய காணியை வலிகாமம் - வடக்கு பகுதியில் கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, உரிய காணி உரிமையாளருக்கு காணி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.