எந்த ஒரு இடத்திலும் நாங்கள், ‘120 ரூபாய்க்கு எங்களுடைய நெல்லை வாங்குங்கள்’ என்று நாங்கள் குறிப்பிடவில்லை. அந்த விடயத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அந்த விடயம் எங்களால் சொல்லப்படவில்லை. எங்களுக்கு 135 ரூபாய் உற்பத்திச்செலவு போகின்றது, 150 ரூபாயக்கு எங்களிடம் கொள்வனவு செய…
எந்த ஒரு இடத்திலும் நாங்கள், ‘120 ரூபாய்க்கு எங்களுடைய நெல்லை வாங்குங்கள்’ என்று நாங்கள் குறிப்பிடவில்லை. அந்த விடயத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அந்த விடயம் எங்களால் சொல்லப்படவில்லை. எங்களுக்கு 135 ரூபாய் உற்பத்திச்செலவு போகின்றது, 150 ரூபாயக்கு எங்களிடம் கொள்வனவு செய்ய வேண்டும் என கமக்காரர்கள் அமைப்புகளின் மாவட்ட அதிகாரசபையின் தலைவர் சி.சந்திரமோகன் தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கமக்காரர்கள் அமைப்புகளின் மாவட்ட அதிகாரசபையின் தலைவர் சி.சந்திரமோகன், கமக்காரர்கள் அமைப்புகளின் மாவட்ட அதிகாரசபையின் செயலாளர் இ.திரேசகுமார்,உறுப்பினர் மகேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தலைவர்,

