கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் வழங்கியுள்ளனர். கடந்த 24/08/2026 திங்கட்கிழமை 15 நிமிடங்கள் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமா…

கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் வழங்கியுள்ளனர்.  கடந்த 24/08/2026 திங்கட்கிழமை 15 நிமிடங்கள் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து கேவிலிலிருந்து மருதங்கேணி ஊடாக பருத்தித்துறைக்கு தனது முதலாவது சேவையை 15 நிமிடங்கள் முன்னதாக மேற்கொண்ருந்தது.மிகுந்த சிரமம் இதனால் வழமையாக செல்கின்ற உத்தியோகத்தர்கள், வடமராட்சி கிழக்கின் பல கிராமங்களிலிருந்தும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்காக அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பருத்தித்துறை நகரின் பல பாடசாலைகளில் பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் பேருந்தை தவற விட்டிருந்த நிலையில் மிக மிக சிரமங்களுக்கு மத்தியில் அவசர அவசரமாக உரிய நேரத்திற்கு வாகனங்களிலும், நடந்தும் சென்றிருந்தார்கள். இது தொடர்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் எம்மை தொடர்பு கொண்டு விளக்கம் ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.விளக்கத்தில் மேலும், எமது முதலாவது பேருந்து சேவை கேவிலிலிருந்து மருதங்கேணியூடாக 5:45 மணிக்கு புறப்படுவது வழமை. ஆனால் தனியார் போக்குவரத்து சேவையினர் தங்களது சேவையினை குழப்பும் வகையில் அன்றைய தினத்ததிலிருந்து 5:45 மணிக்கு கேவிலிலிருந்து சேவையை ஆரம்பிக்க வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அனுமதியளித்திருந்தார்.குழப்பும் செயற்பாடு இதனால் நாம் அன்றிலிருந்து காலை 5:30 மணிக்கு சேவையை ஆரம்பித்திருந்தோம். ஆனால் அத்தனையும் குழப்பம் வகையில் தனியார் போக்குவரத்து சங்கம் நாங்கள் புறப்பட தயாரான நேரமான 5:30 மணிக்கு புறப்பட்டனர். இதனால் தான் குறித்த நாள் பரீட்சை எழுத செல்லவிருந்த மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டதாகவும், இந்த நிலைமைக்கு வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தான் காரணம் என்றும் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12