அரசியல் நவஞ்சகம் காரணமாக எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தையோ அல்லது நீதிமன்றத்தின் சுயாதீனத்தையோ பாதுகாப்பதற்க…

அரசியல் நவஞ்சகம் காரணமாக எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தையோ அல்லது நீதிமன்றத்தின் சுயாதீனத்தையோ பாதுகாப்பதற்காக அல்ல என முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். மாறாக எதிர்க்கட்சியின் சட்டத்தின் முன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என்ற அச்சத்தினாலேயே இந்த சட்ட மூலத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.ஹட்டன் நகரில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அந்த முன்னணியின் இதனைத் தெரிவித்தனர். ராஜபக்ச குடும்பத்தினர் நிரந்தரமாக ஆட்சியில் இருப்பதற்கு வழியமைத்த 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது மௌனம் காத்தவர்கள், (01) ஆம் திகதி 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் ‘சூப்பர்மேன்களாக’ தோற்றமளிக்க முயல்கின்றனர் எனக் குற்றம் சுமத்தியுள்ளார். அன்று முழு நாடும் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட போது எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யாத ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினர், இன்று நீதிமன்றத்தை நாடுவது மக்களின் சுதந்திரத்திற்காக அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயகம் அல்லது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தற்போதைய எதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில மாதங்களுக்குள் இடம்பெறக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறை தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே இத்தரப்பினர் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வாறு செயற்படுவதாக சமீர பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.